/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
லத்தியுடன் திருச்சி எஸ்.பி., குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை
/
லத்தியுடன் திருச்சி எஸ்.பி., குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை
லத்தியுடன் திருச்சி எஸ்.பி., குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை
லத்தியுடன் திருச்சி எஸ்.பி., குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை
ADDED : செப் 18, 2024 12:23 AM

திருச்சி : 'சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், என்னை தொடர்பு கொள்ளலாம்' என வலியுறுத்தி, மொபைல் போன் எண்ணை தெரிவித்து, 'ஐ ஆம் வெயிட்டிங்' என, கையில் லத்தியுடன், திருச்சி எஸ்.பி., வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இருப்பவர் வருண்குமார். இவர் பதவியேற்றது முதல் தொடர்ந்து சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சினிமா பாணியில், 'ஐ ஆம் வெயிட்டிங்' என்ற டயலாக்குடன், எஸ்.பி., வருண்குமார், தன் மொபைல் போனில், கையில் லத்தியுடன் நிற்பதுபோல, வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
அதில், குற்றங்களை பட்டியலிட்டு, புகார் தெரிவிக்க விரும்பினால், என்னை, 9487464651 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், திருச்சி மாவட்டம், வாத்தலை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசாக இருந்தவர் விஜயகுமார். அதுபோல, மண்ணச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசாக இருந்தவர் வினோத். இவர்கள் இருவரும் அப்பகுதியில் நடக்கும் சட்ட விரோத லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இருவரையும் நேற்று முன்தினம் இரவு, ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார்.
இவர்களில், போலீஸ்காரர் விஜயகுமார் அண்மையில் அடிதடி வழக்கில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர்.

