/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நிதி மோசடி வழக்கில் இரண்டு பெண்கள் கைது
/
நிதி மோசடி வழக்கில் இரண்டு பெண்கள் கைது
ADDED : ஆக 21, 2024 01:25 AM
திருச்சி:திருச்சி பாலக்கரையை தலைமையிடமாக கொண்டு எப்.எஸ்.எம்.எஸ்., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது.
அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக பிரேமி, 45, அவரது கணவர் ஆனந்த், காயத்ரி மற்றும் துறையூர் கிளை மேலாளராக கவுதமி, 32, என்பவரும் பணியாற்றினர்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணம், குறைந்த காலக்கெடுவில் இரட்டிப்பாக வழங்கப்படும் என, மோசடியாக அறிவிக்கப்பட்டது.
இதை நம்பி, துறையூரைச் சேர்ந்த ரவி, 32, என்பவர் உட்பட, ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை டிபாசிட் செய்தனர். ஆனால் அந்த நிறுவனத்தினர் கூறியபடி, தொகையை வழங்கவில்லை.
இதையடுத்து ரவி புகாரின்படி, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று, பிரேமி, கவுதமி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

