/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
என்.ஐ.டி.,க்கு தேர்வான பழங்குடியின மாணவியுடன் உதயநிதி சந்திப்பு
/
என்.ஐ.டி.,க்கு தேர்வான பழங்குடியின மாணவியுடன் உதயநிதி சந்திப்பு
என்.ஐ.டி.,க்கு தேர்வான பழங்குடியின மாணவியுடன் உதயநிதி சந்திப்பு
என்.ஐ.டி.,க்கு தேர்வான பழங்குடியின மாணவியுடன் உதயநிதி சந்திப்பு
ADDED : ஆக 01, 2024 10:42 PM

திருச்சி:திருச்சி மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாக்கள், புதிய திட்டப்பணிகள் துவக்கம், முடிந்த பணிகள் திறப்பு விழாக்களில் பங்கேற்க, நேற்று முன்தினம், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திருச்சி வந்தார்.
முதல்நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், நேற்று காலை, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அல்லுாரில் உள்ள பாரதி உதவிபெறும் பள்ளியில், மாணவிகளுடன் காலை உணவு அருந்தினார். அப்போது காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார். அங்கிருந்து முக்கொம்பு சென்ற அவர், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டு, நிலைமை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் உதயநிதி நலம் விசாரித்தார். தொடர்ந்து, அச்சைமலையில் உள்ள தென்புறநாடு, புத்துார் கிராமத்தில், அடிப்படைகள் வசதிகள் குறித்து அங்குள்ள மக்களுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடினார். அங்கிருந்து புதிய பஸ் வசதியை துவக்கி வைத்தார்.
பின்னர், கோம்பை கிராமத்தில் உள்ள சின்ன இலுப்பூரில் இருந்து, ஜே.இ.இ., தேர்வெழுதி, திருச்சி என்.ஐ.டி.,யில் படிக்க தேர்வான மாணவி ரோகிணி வீட்டுக்கு சென்ற உதயநிதி, அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியுடன், அமைச்சர்கள் நேரு, மகேஷ், சிவசங்கரன், திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் உள்ளிட்ட பலரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.