/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பாறைக்கு வைத்த வெடியால் நா.த.க., நிர்வாகி படுகாயம்
/
பாறைக்கு வைத்த வெடியால் நா.த.க., நிர்வாகி படுகாயம்
பாறைக்கு வைத்த வெடியால் நா.த.க., நிர்வாகி படுகாயம்
பாறைக்கு வைத்த வெடியால் நா.த.க., நிர்வாகி படுகாயம்
ADDED : மார் 08, 2025 01:17 AM
திருச்சி:மணப்பாறை அருகே அனுமதியின்றி பாறைக்கு வெடி வைத்ததில், உடைந்த பாறை தாக்கி, நா.த.க., நிர்வாகி காயமடைந்ததால், அ.தி.மு.க., நகர துணை செயலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர அ.தி.மு.க., துணை செயலராக இருப்பவர் பாஸ்கர், 54. இவரது மனைவி சுதா, மணப்பாறை நகராட்சி சேர்மனாக சில மாதங்கள் பதவி வகித்தார். இந்நிலையில், பொய்கைப்பட்டி பகுதியில் பாஸ்கர் வாங்கியிருந்த நிலத்தில் பாறைகளை அகற்ற, கம்ப்ரசர் இயந்திரத்தால், உடைத்து, வெடி வைத்துள்ளார்.
உரிய அனுமதி பெறவில்லை. நேற்று முன்தினம் அவ்வழியே, பெருமாம்பட்டியைச் சேர்ந்த நா.த.க., தொகுதி பொருளாளர் சரவணன், 30, பைக்கில் வந்துள்ளார். அப்போது, வெடி வெடித்து, உடைந்த பாறை பறந்து வந்து, சரவணன் தலையில் பட்டது. சரவணன் படுகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சரவணன் மணப்பாறை போலீசில் அளித்த புகாரில், அ.தி.மு.க., நகர துணை செயலர் பாஸ்கர் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, பாஸ்கரை தேடி வருகின்றனர். கம்ப்ரசர் டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.