/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பலாத்காரம் செய்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை
/
பலாத்காரம் செய்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை
ADDED : பிப் 08, 2024 02:32 AM
திருச்சி,:திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி.,யில், 2019ம் ஆண்டு, கல்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படித்தார். அவர் தன் ஆண் நண்பருடன், 2019ம் ஆண்டு, ஆகஸ்ட், 4 அதிகாலை, என்.ஐ.டி., பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன், 37, என்பவர், அவர்களை விசாரித்தார். பின், அந்த பெண்ணை கல்லுாரியில் விடுவதாக கூறி, தன் பைக்கில் ஏற்றிச் சென்று, அருகில் உள்ள காட்டில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து தகவலறிந்த துவாக்குடி போலீசார், வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.
திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் வழக்கை விசாரித்து, குற்றவாளி மணிகண்டனுக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

