/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மதுவில் சிறுநீர் கலந்த விவகாரம் 2 சக மாணவர்கள் தேர்வு எழுத தடை
/
மதுவில் சிறுநீர் கலந்த விவகாரம் 2 சக மாணவர்கள் தேர்வு எழுத தடை
மதுவில் சிறுநீர் கலந்த விவகாரம் 2 சக மாணவர்கள் தேர்வு எழுத தடை
மதுவில் சிறுநீர் கலந்த விவகாரம் 2 சக மாணவர்கள் தேர்வு எழுத தடை
ADDED : ஜன 24, 2024 01:40 AM
திருச்சி:திருச்சி தேசிய சட்டப்பள்ளி மாணவருக்கு மதுவில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரத்தில், இரண்டு சக மாணவர்கள் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், முத்துக்குளத்தில் தேசிய சட்டப்பள்ளி உள்ளது. இங்கு, ஐந்தாம் ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில் சிலர், கடந்த, 6ம் தேதி பர்த்டே பார்ட்டி நடத்தி உள்ளனர். அப்போது மது அருந்திய, இரு ஐந்தாம் ஆண்டு மாணவர்கள், மதுவில் சிறுநீர் கழித்து கொடுத்து, சக மாணவருக்கு கொடுத்தனர்.
அவரும் பலமுறை அதை வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதும், சிறுநீர் கொடுத்த இரண்டு மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், அவர்கள் மீது புகாரின் பேரில், ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், இரு மாணவர்களும் அடுத்து வரவுள்ள, 10ம் பருவத்தேர்வை எழுத தடைவிதிக்க, தேசிய சட்டப்பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.