/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மாஜி அமைச்சர் உதயகுமாருடன் 300 பேர் கைது
/
மாஜி அமைச்சர் உதயகுமாருடன் 300 பேர் கைது
ADDED : ஜன 01, 2025 06:22 AM

திருச்சி: திருச்சி மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், மாநகரில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளை கண்டித்தும், நேற்று காலை மாநகர அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மரக்கடை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க.,வின் ஜெ., பேரவை செயலரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான உதயகுமார், அமைப்பு செயலர் ரத்தினவேல், மாவட்ட செயலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்ய வந்தபோது, அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார் உட்பட, 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், போலீசார் தங்க வைத்தனர்.

