/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பேரூராட்சி சேர்மனை கண்டித்து 9 கவுன்சிலர்கள் ராஜினாமா
/
பேரூராட்சி சேர்மனை கண்டித்து 9 கவுன்சிலர்கள் ராஜினாமா
பேரூராட்சி சேர்மனை கண்டித்து 9 கவுன்சிலர்கள் ராஜினாமா
பேரூராட்சி சேர்மனை கண்டித்து 9 கவுன்சிலர்கள் ராஜினாமா
ADDED : மே 16, 2025 07:25 AM
திருச்சி : பேரூராட்சி தலைவரை கண்டித்து, கவுன்சிலர்கள் 9 பேர் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சவுந்தர்ராஜன் உள்ளார். மொத்தம், 15 வார்டுகள் கொண்ட இந்த பேரூராட்சியில், 10க்கும் மேற்பட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர்.
சவுந்தர்ராஜன் தன்னிச்சையாக செயல்படுவதோடு, வார்டு பணிகளை செய்து தருவதில்லை என, கவுன்சிலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையே காரணமாக கூறி, நேற்று தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட, 9 பேர், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணனிடம் கொடுத்தனர்.
பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் துவாரநாத் சிங், கவுன்சிலர்கள் ராஜினாமா குறித்து விசாரிக்கிறார்.