/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
வயதான தம்பதியை தாக்கி கொள்ளையடித்த கும்பல்
/
வயதான தம்பதியை தாக்கி கொள்ளையடித்த கும்பல்
ADDED : பிப் 15, 2024 02:43 AM
லால்குடி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, ஒரத்துார் வடக்குப்பட்டி தோட்டத்தில், கணேசன், 72, அவரது மனைவி தைலம்மை, 65, வசிக்கின்றனர். இந்த தம்பதியின் மூன்று மகன்களும் திருமணமாகி, ஊருக்குள் தனித்தனியே வசிக்கின்றனர். நேற்று அதிகாலை, வயதான தம்பதி இருவரும் வீட்டுக்கு வெளியே துாங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 2:30 மணிக்கு தோட்டத்து வீட்டுக்குள் நுழைந்த நான்கு பேர், துாங்கிக் கொண்டிருந்த தம்பதியை தாக்கி, கட்டிப்போட்டு, வீட்டுக்குள் இருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள், 15,000 ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.
நேற்று காலையில் தோட்டத்துக்கு சென்றவர்கள், காயமடைந்து மயங்கிக் கிடந்த வயதான தம்பதியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கல்லக்குடி போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

