/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஆட்டோ மீது கவிழ்ந்த லாரி உடல் நசுங்கி 3 பேர் பலி
/
ஆட்டோ மீது கவிழ்ந்த லாரி உடல் நசுங்கி 3 பேர் பலி
ADDED : மார் 01, 2024 07:51 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை அருகே அணலை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 38, விவசாய கூலித்தொழிலாளி. இவரது தாய் சுசீலா, 60.
இவருக்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு, பெட்டவாய்த்தலை தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த், 34, என்பவர் ஓட்டினார்.
அவர்கள் மீண்டும் வீடு திரும்ப, நேற்று முன்தினம் நள்ளிரவு பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே, காரைக்காலில் இருந்து சேலத்துக்கு தாது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரிக்கு அடியில் சிக்கிய, ஆட்டோவில் வந்த சரவணன், சுசீலா, அரவிந்த் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாயினர்.
பெட்டவாய்த்தலை போலீசார் மூவரின் உடல்களையும், சிரமத்திற்கு பின் மீட்டனர்.
லாரி டிரைவரான கரூர், குளித்தலையைச் சேர்ந்த வெள்ளி ராஜா, 42, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

