/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
இளைஞருக்கு அரிவாள் வெட்டு கும்பலுக்கு வலை
/
இளைஞருக்கு அரிவாள் வெட்டு கும்பலுக்கு வலை
ADDED : ஜன 19, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன்தினம், திருவளர்சோலையை சேர்ந்த முத்துக்குமார், 28, தன் நண்பர்கள் லோகேஷ், சஞ்சய், ராம் ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த நான்கு பேர், முத்துக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பினர்.
அதிர்ச்சியடைந்த நண்பர்கள், பொதுமக்கள் உதவியுடன், முத்துக்குமாரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கோட்டை போலீசார், முத்துக்குமாரிடம் விசாரித்தனர்.
முன்விரோதம் காரணமாக, மர்ம கும்பல் தாக்கி சென்றதாக முத்துக்குமார் தெரிவித்தார். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் 'சிசிடிவி' காட்சிகளை வைத்து, மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

