/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தத்து கொடுக்கப்பட்ட குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
/
தத்து கொடுக்கப்பட்ட குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
தத்து கொடுக்கப்பட்ட குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
தத்து கொடுக்கப்பட்ட குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
ADDED : நவ 27, 2025 11:59 PM
எடமலைப்பட்டி புதுார்: திருச்சியில் தத்து கொடுக்கப்பட்ட பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பான புகாரில், தாய் உட்பட, மூன்று பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
திருச்சி, கிராப்பட்டி பகுதியை சேர்ந்த பெண், ஓராண்டுக்கு முன் தனக்கு பிறந்த பெண் குழந்தையை, ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த விமலா என்ற பெண்ணுக்கு, சட்ட விரோதமாக தத்து கொடுத்தார்.
விமலா, அந்த குழந்தையை கரூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டார். இதுகுறித்து அண்மையில் சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, சுகாதாரத் துறையினர் கரூர் சென்று, குழந்தையை மீட்டு, திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி, குழந்தையின் தாய், அவரிடம் தத்து வாங்கி, வேறு பெண்ணுக்கு விற்ற விமலா, குழந்தையை வாங்கிய கரூர் பெண் ஆகியோர் மீது, குழந்தைகள் நலக்குழுமம் சார்பில், எடமலைப்பட்டி புதுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பெண்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

