/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அ.தி.மு.க., பேனர்கள் அகற்றம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
அ.தி.மு.க., பேனர்கள் அகற்றம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
அ.தி.மு.க., பேனர்கள் அகற்றம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
அ.தி.மு.க., பேனர்கள் அகற்றம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஆக 20, 2025 03:03 AM

ஸ்ரீரங்கம்:திருச்சியில் அ.தி.மு.க., பேனர்களை அகற்றியதால், அக்கட்சியினர் ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, வரும் 23, 24, 25ல் திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட பகுதிகளில், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அவரை வரவேற்று, திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் பகுதிகளில் அ.தி.மு.க.,வினர் பேனர்கள் வைத்திருந்தனர்.
பலத்த காற்று வீசுவதால், பேனர்கள் சாய்ந்து விபத்து ஏற்படும் என்றும், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டியும், நேற்று முன்தினம் இரவு, திருச்சியில் வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் போலீசார் அகற்றினர். இதனால், புறநகர் வடக்கு மாவட்ட செயலர் பரஞ்சோதி தலைமையிலான அ.தி.மு.க.,வினர், ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேனர்கள் அகற்றப்பட்டதை கண்டித்து, மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன் தலைமையிலான அ.தி.மு.க.,வினர், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.