/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஆயுதப்படை போலீஸ்காரர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு சிக்கினர்
/
ஆயுதப்படை போலீஸ்காரர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு சிக்கினர்
ஆயுதப்படை போலீஸ்காரர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு சிக்கினர்
ஆயுதப்படை போலீஸ்காரர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு சிக்கினர்
ADDED : ஆக 19, 2025 01:25 AM
திருச்சி; திருச்சியில் இளைஞரிடம் பணம் பறித்த விவகாரத்தில், இரு ஆயுதப்படை போலீசார் கைது செய்யப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
திருச்சி, காந்தி மார்க்கெட் பழைய பால்பண்ணை பகுதியில், இரு வாரங்களுக்கு முன், திருநங்கையும், இளைஞர் ஒருவரும் ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அங்கு வந்த மூவர், இளைஞரை மிரட்டி, அவரிடம் இருந்து 3,000 ரூபாயை பறித்துச் சென்றனர். இளைஞர் புகாரில், காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், இளைஞரிடம் பணம் பறித்தது, திருச்சி மாநகர ஆயுதப்படை போலீசார் அசோக்குமார், 25, புண்ணியகுமார், 29, மற்றும் ஊர்காவல் படை வீரர் வீரமணி என, தெரிய வந்தது.
அவர்களை நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அசோக்குமார், புண்ணியகுமார் இருவரையும் சஸ்பெண்ட் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார். ஊர்காவல் படை வீரர் வீரமணி, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.