/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பிரசவத்தில் குழந்தை பலி? சடலத்தை புதைத்த தாய் கைது
/
பிரசவத்தில் குழந்தை பலி? சடலத்தை புதைத்த தாய் கைது
பிரசவத்தில் குழந்தை பலி? சடலத்தை புதைத்த தாய் கைது
பிரசவத்தில் குழந்தை பலி? சடலத்தை புதைத்த தாய் கைது
ADDED : மே 04, 2025 01:48 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே, வடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் - ஜெனினா, 38, தம்பதிக்கு ஏற்கனவே, நான்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது, சுரேஷ் வெளியூரில் வேலை பார்க்கிறார். இந்நிலையில், ராசாம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் ஜெனினாவுக்கு, ஏப்., 29ம் தேதி, ஐந்தாவதாக பெண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம், ஜெனினாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், மாற்று சாவியை கொண்டு வந்து, வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டுக்குள் துர்நாற்றம் வீசியது.
மண்ணச்சநல்லுார் போலீசார் ஜெனினாவை பிடித்து விசாரித்தனர். ஏற்கனவே, நான்கு குழந்தைகளுக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டதாகவும், ஐந்தாவதாக பிறந்த பெண் குழந்தை இறந்தே பிறந்ததாகவும் தெரிவித்தார். இதனால், வீட்டின் உள்ளேயே குழி தோண்டி குழந்தையை புதைத்ததாக தெரிவித்தார்.
குழந்தையின் உடலை மீட்ட போலீசார், ஜெனினாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.