ADDED : செப் 17, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கரூருக்கு, நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட எம்.எம்.எம்., என்ற தனியார் பஸ்சில் ஜீயபுரம் செல்ல பெண் ஒருவர் ஏறினார். கரூர் செல்லும் மற்றொரு பஸ் வந்ததால், அதில் ஏறுவதற்காக இறங்கி சென்ற பெண், மீண்டும் இதே பஸ்சில் ஏறினார். ஓட்டுநர் கணேசன், அந்த பெண்ணை திட்டினார்.
அந்த பெண், உறவினர்களுக்கு அலைபேசியில் தகவல் அளிக்க, பஸ் ஜீயபுரம் சென்றபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழி மறித்து, ஓட்டுநரை உருட்டுகட்டைகளால் தாக்கினர். பலத்த காயமடைந்த கணேசன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜீயபுரம் போலீசார், ஓட்டுநரை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.