/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
முசிறியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை திட்டம்
/
முசிறியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை திட்டம்
முசிறியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை திட்டம்
முசிறியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை திட்டம்
ADDED : டிச 26, 2024 11:40 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், முசிறி நகருக்குள் நாமக்கல் மற்றும் சேலம் செல்வதற்கான பிரதான சாலை உள்ளது. இது தவிர, துறையூர், தண்டலைபுத்துார், தா.பேட்டை பகுதிகளில் இருந்தும் முசிறி நகருக்குள் வாகனங்கள் வந்து செல்கின்றன. நகரப் பகுதிக்குள் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், முசிறி பேரூராட்சியில் நகரமயமாக்கல் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளை கருதி, முசிறி நகரின் புறநகர் பகுதியில் உள்ள நான்கு மாநில நெடுஞ்சாலைகளை இணைக்க, நெடுஞ்சாலை துறை முன் மொழிந்துள்ளது.
அதன்படி, திருச்சி - -நாமக்கல் நெடுஞ்சாலை, முசிறி - -துறையூர் நெடுஞ்சாலை, முசிறி -- தண்டலைப்புத்துார் நெடுஞ்சாலை மற்றும் முசிறி -- தா.பேட்டை நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், புதிதாக புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது.
திருச்சி - -நாமக்கல் நெடுஞ்சாலையில் உள்ள உமையாள்புரம் மற்றும் கொக்குவெட்டியான் கோவில் ஆகிய இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுடன் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.
உமையாள்புரம், சிவந்திலிங்கபுரம், எம்.புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் சில பகுதிகளிலும் புறவழிச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. புதிய சாலையில், எட்டு புதிய பாலங்கள் அமைய உள்ளதால், மண் பரிசோதனை நடந்து வருகிறது.
'திருச்சி, நாமக்கல், துறையூர் மற்றும் தா.பேட்டை ஆகிய நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள், முசிறி நகருக்குள் வருவதை தவிர்க்கும் வகையில், 9.3 கி.மீ.,யில் இருவழிப் பாதையாக புதிய சாலை அமைக்கப்படும்.
'புறவழிச் சாலைக்கு தேவையான நிலத்தின் அளவை, வருவாய்த் துறை இறுதி செய்தவுடன், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய அரசிடம் கோரப்படும்' என, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.

