/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
விவசாயியை தாக்கிய வி.ஏ.ஓ., மீது வழக்கு
/
விவசாயியை தாக்கிய வி.ஏ.ஓ., மீது வழக்கு
ADDED : பிப் 16, 2024 02:31 AM
திருச்சி:பூர்வீக நிலம் பிரச்னை தொடர்பாக சந்திக்க வந்தவரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டிய வி.ஏ.ஓ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரிகுளத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி இருதயராஜ் 43. இவருடைய குடும்பத்துக்கு சொந்தமான பூர்வீக நிலம் மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ளது.
இந்த நிலத்தில் உள்ள பிரச்னை தொடர்பாக மலையடிப்பட்டி வி.ஏ.ஓ. ரவிச்சந்திரன் 45 என்பவரை சந்திக்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி மணப்பாறை தாசில்தார் அலுவலகம் வந்தார்.
அங்கிருந்த வி.ஏ.ஓ. ரவிச்சந்திரன் என்ன பிரச்னை என்று கூட கேட்காமல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சட்டை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து சகாயராஜ் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தன்னை அடித்து கொலை மிரட்டல் விடுத்த வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் வி.ஏ.ஓ. ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து வி.ஏ.ஓ. மீது மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.