ADDED : செப் 04, 2026 03:29 AM

திருச்சி மாவட்டம், சமயபுரம், பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக, பாதிரியார் ஜெயராஜ், ஆறு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார்.
நேற்று முன்தினம், வேன் கட்டணம் குறித்து கேட்க, ஜெயராஜ் அறைக்கு சென்ற, ஏழாம் வகுப்பு மாணவிக்கு, ஜெயராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தப்பிக்க முயன்றபோது, 'வெளியே சொன் னால் தொலைத்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.
தகவலில், மாணவியின் பெற்றோர், கிராம மக்கள், நேற்று காலை பள்ளிக்கு திரண்டு வந்தனர். ஜெயராஜ், பள் ளியின் பின்வாசல் வழியாக, தப்பியோடிவிட்டார். பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டபோது, ஜெயராஜ், இதேபோல, பல மாணவி யருக்கும் தொல்லை கொடுத்தது தெரிந்தது.
சமயபுரம் போலீசார், பொதுமக்களிடம் பேசி, அமைதிப்படுத்தினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். போலீசார், ஜெயராஜை போக்சோவில், நேற்று கைது செய்தனர்.
