/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கோவில் வளாகத்தில் கூட்டம் பா.ஜ., நிர்வாகிகள் மீது புகார்
/
கோவில் வளாகத்தில் கூட்டம் பா.ஜ., நிர்வாகிகள் மீது புகார்
கோவில் வளாகத்தில் கூட்டம் பா.ஜ., நிர்வாகிகள் மீது புகார்
கோவில் வளாகத்தில் கூட்டம் பா.ஜ., நிர்வாகிகள் மீது புகார்
ADDED : ஆக 07, 2025 02:53 AM
திருச்சி:திருச்சியில் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் பா.ஜ., கட்சியினர் பூத் கமிட்டி கூட்டம் நடத்தியதாக, கோவில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். திருச்சி, உறையூரில் பஞ்சவர்ணசுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த, 15 பேர், கோவில் உட்பிரகாரத்தில் உட்கார்ந்து கூட்டம் நடத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து செய்தி கள் வெளியானது.
இந்நிலையில், கோவில் நிர்வா கத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், கோவில் வளாகத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய பா.ஜ., மாவட்ட பொருளாளர் செல்வதுரை, உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் மீது, கோவில் நிர்வாகம் சார்பில் உறையூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
அதன் படி, போலீசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.