/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கல் மண்டபத்தை ஆக்கிரமித்து மசூதி கட்ட முயற்சிப்பதாக புகார்
/
கல் மண்டபத்தை ஆக்கிரமித்து மசூதி கட்ட முயற்சிப்பதாக புகார்
கல் மண்டபத்தை ஆக்கிரமித்து மசூதி கட்ட முயற்சிப்பதாக புகார்
கல் மண்டபத்தை ஆக்கிரமித்து மசூதி கட்ட முயற்சிப்பதாக புகார்
ADDED : அக் 30, 2025 03:33 AM
திருச்சி: திருச்சி அருகே பழமையான கல் மண்டபத்தை ஆக்கிரமித்து, அங்கு மசூதி கட்ட முயற்சிப்பதாக, ஹிந்து முன்னணி புகார் கூறியுள்ளது.
ஹிந்து முன்னணி திருச்சி கோட்ட செயலர் போஜராஜன், மாவட்ட நிர்வாகி பாண்டியன், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார்:
திருச்சி மாவட்டம், வெங்கங்குடி அருகே நங்கமங்கல சத்திரத்தில், ஹிந்து கோவில் சிற்பங்கள் இருந்த பழமையான கல் மண்டபத்தை, தற்போது, முஸ்லிம்கள் ஆக்கிரமித்து, வக்பு சொத்து என போர்டு வைத்துள்ளனர். கல் மண்டபத்திற்கு அருகே மசூதியும் உள்ளது.
மசூதி அருகே இருந்த கல் மண்டபத்தின் ஒரு பகுதியை அகற்றியுள்ளனர். அந்த கல் மண்டபத்தின் துாண்களில் ஹிந்து கடவுள்களின் திருவுருவங்கள் இருந்துள்ளன. தற்போது அந்த கல் மண்டபத்தையும் இடித்து அகற்றியுள்ளனர்.
அங்கு அமைந்துள்ள கல் மண்டபத்தின் துாண்கள் அனைத்தும் ஹிந்துக்களின் பாரம்பரிய கோவில், சத்திரத்தின் மாதிரியை கொண்டுள்ளது. மேலும் அந்த பகுதியின் பெயரும், நங்கமங்கல சத்திரம் என்று ஹிந்து பெயரிலேயே அழைக்கப்படுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர், அந்த பகுதியை ஆய்வு செய்து, ஹிந்து பக்தர்களுக்கு சொந்தமான கல் மண்டபத்தை மீட்டு, பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

