/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
காவிரி ஆற்றில் கண்டெடுத்த ராக்கெட் லாஞ்சர் அழிப்பு
/
காவிரி ஆற்றில் கண்டெடுத்த ராக்கெட் லாஞ்சர் அழிப்பு
காவிரி ஆற்றில் கண்டெடுத்த ராக்கெட் லாஞ்சர் அழிப்பு
காவிரி ஆற்றில் கண்டெடுத்த ராக்கெட் லாஞ்சர் அழிப்பு
ADDED : நவ 03, 2024 02:56 AM
திருச்சி:திருச்சி, ஜீயபுரம் அருகே வட தீர்த்தநாத சுவாமி கோவில் எதிரே காவிரி ஆற்றில், கடந்த 30ம் தேதி மாலை, ஆற்று படித்துறை பாறைகளுக்கு இடையே ராக்கெட் லாஞ்சர் கிடப்பதாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், 60 செ.மீ., நீளம், 3,800 கிராம் எடையுள்ள ராக்கெட் லாஞ்சர் போன்ற அமைப்புடைய வெடிபொருளை கைப்பற்றினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், அந்த வெடி பொருளை ஆய்வு செய்தபோது, அதன் கூர் முனைப் பகுதியில் வெடி மருந்து நிரப்பி இருப்பதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் முக்கொம்பு நடுக்கரை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், குழி தோண்டி, அந்த வெடிபொருளை புதைத்து, வெடிக்க வைத்து அழித்தனர்.