/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி திடீர் சாவு
/
மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி திடீர் சாவு
ADDED : ஆக 26, 2011 01:34 AM
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கு கைதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் கீழப்பாளூர் அடுத்த நெய்குப்பையைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (74). இவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த 2001ம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் உயர்நீதிமன்ற ஜாமீனில் அவர் வெளியே வந்தார். ஜாமீன் முடிந்து கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி அவர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த அருணாச்சலம், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு 11.20 மணிக்கு அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.கே.கே.நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.