/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கல்லக்குடி ரயில்வே ஸ்டேஷனில் புதிய ரிசர்வேஷன் சென்டர்
/
கல்லக்குடி ரயில்வே ஸ்டேஷனில் புதிய ரிசர்வேஷன் சென்டர்
கல்லக்குடி ரயில்வே ஸ்டேஷனில் புதிய ரிசர்வேஷன் சென்டர்
கல்லக்குடி ரயில்வே ஸ்டேஷனில் புதிய ரிசர்வேஷன் சென்டர்
ADDED : ஆக 06, 2011 02:21 AM
திருச்சி: லால்குடி அடுத்த டால்மியாபுரம் பகுதியில் உள்ள ரயில் பயணிகளின் நலனுக்காக கல்லக்குடி-பழங்காநத்தம் ரயில்வே ஸ்டேஷனில் புதிய கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் விரைவில் அமைத்து தரவேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு புள்ளம்பாடி யூனியன் சேர்மனும், தென்மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஜெயப்பிரகாஷ் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அதன்பேரில், கல்லக்குடி-பழங்காநத்தம் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக கம்ப்யூட்டருடன் கூடிய முன்பதிவு மையம் அமைக்கப்பட்டு ரயில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் அமைத்துக் கொடுத்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியலிங்கம் மற்றும் முதுநிலை வணிக மேலாளர் பிரசாத் ஆகியோருக்கு ஜெயப்பிரகாஷ் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி கூறினார்.