/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக சென்றவர் விபத்தில் பரிதாப பலி
/
தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக சென்றவர் விபத்தில் பரிதாப பலி
தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக சென்றவர் விபத்தில் பரிதாப பலி
தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக சென்றவர் விபத்தில் பரிதாப பலி
ADDED : செப் 27, 2011 11:47 PM
குளித்தலை: தோகைமலை நெய்தலூர் காலனியை சேர்ந்த இருளன் என்பவரது மகன்
காளிதாஸ் (44) இவர் உறவினர் கண்ணன் என்பவருடன் பாந்தர் மொபட்டில், நேற்று
மனு தாக்கல் செய்த தோகைமலை ஒன்றிய தி.மு.க., வேட்பாளர் அண்ணாதுரைக்கு
ஆதரவாக சென்றார். நேற்று மதியம் 3.30 மணிக்கு மனுதாக்கல் நிகழ்ச்சி முடிந்த
பிறகு, மொபட்டில் காளிதாஸ் வீடு திரும்பி கொண்டிருந்தார். மொபட்டை கண்ணன்
ஓட்டினார். கீழைவெளியூர் பகுதியில் சென்ற போது, மொபட் மீது டாடா வேன்
மோதியதில் சம்பவ இடத்தில் காளிதாஸ் இறந்தார். படுகாயமடைந்த கண்ணன் மணப்பாறை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தோகைமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.