/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திண்டுக்கல் பிரபல ரவுடி திருச்சியில் சுட்டு பிடிப்பு
/
திண்டுக்கல் பிரபல ரவுடி திருச்சியில் சுட்டு பிடிப்பு
திண்டுக்கல் பிரபல ரவுடி திருச்சியில் சுட்டு பிடிப்பு
திண்டுக்கல் பிரபல ரவுடி திருச்சியில் சுட்டு பிடிப்பு
ADDED : டிச 13, 2025 01:21 AM

திருச்சி: திண்டுக்கல்லை சேர்ந்தவர் ராஜசேகர், 35; பிரபல ரவுடியான இவர் மீது, பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கோவை மாவட்டம், போத்தனுாரில், அண்மையில், வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் ராஜசேகருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ராஜசேகரை பிடிக்க, கோவை மாநகர போலீசார் தனிப்படை அமைத்தனர்.
திருச்சி, எடமலைப்பட்டி புதுார் பகுதியில், ராஜசேகர் தலைமறைவாக இருப்பது தெரிந்தது.
நேற்று காலை, திருச்சி வந்த கோவை தனிப்படை எஸ்.ஐ., பாஸ்கர் தலைமையிலான போலீசார், சீனிவாசன் நகரில், ராஜசேகர் தங்கியிருந்த வீட்டை, 11:20 மணியளவில் சுற்றி வளைத்தனர்.
அப்போது, போலீசாரிடம் தப்பிக்க, ராஜ சேகர் அரிவாளால் எஸ்.ஐ., மற்றும் போலீசாரை வெட்டினார்.
இதையடுத்து, தற்காப்புக்காக, எஸ்.ஐ., பாஸ்கர், கைத்துப்பாக்கியால் சுட்டதில், ராஜசேகர் இடது விலா மற்றும் தொடையில் குண்டு பாய்ந்தது.
சுருண்டு விழுந்த அவரை போலீசார் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ரவுடி வெட்டியதில் காயமடைந்த எஸ்.ஐ., மற்றும் ஏட்டு கண்ணன் ஆகியோரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் மதிய நேரத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

