/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
/
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
ADDED : டிச 14, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: சென்னை, ரெட்ஹில்சை சேர்ந்த விஜய், 26, கடந்த, 2021ல், திருச்சி, திருவெறும்பூர் அருகே, துவாக்குடியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது, வடக்கு மலையை சேர்ந்த, 19 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி, கர்ப்பமாக்கி உள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார்படி, துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விஜயை தேடினர். தலைமறைவான விஜயை கைது செய்து ஆஜர்படுத்த, திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, ரெட்ஹில்சில் வசித்த விஜயை, நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று கைது செய்தனர்.

