/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
போலீசிடமிருந்து ரவுடி மீட்பு; கிராம மக்களால் பரபரப்பு
/
போலீசிடமிருந்து ரவுடி மீட்பு; கிராம மக்களால் பரபரப்பு
போலீசிடமிருந்து ரவுடி மீட்பு; கிராம மக்களால் பரபரப்பு
போலீசிடமிருந்து ரவுடி மீட்பு; கிராம மக்களால் பரபரப்பு
ADDED : டிச 15, 2025 02:26 AM
திருச்சி: திருச்சி அருகே பிடிபட்ட ரவுடியை, போலீ சாரை மிரட்டி, கிராம மக்கள் மீட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் நந்தகுமார், 29; பிரபல ரவுடி. இவர் மீது, ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம், கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நந்தகுமாரை போலீசார் பிடித்தனர்.
அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வர முற்பட்டபோது, கொத்தமங்கலம் பகுதி, தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகளும், கிராம மக்களும், போலீசாருக்கு மிரட்டல் விடுத்து, நந்தகுமாரை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் அதிகாரிகள், அவரை சிறைப்படுத்த ஆலோசனை நடத்தி வருகின்றனர். ரவுடி யான நந்தகுமார், வீரமுத்தரையர் சங்கத்தில் மாநகர பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.