/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மது போதையில் தகராறு; தொழிலாளி அடித்து கொலை
/
மது போதையில் தகராறு; தொழிலாளி அடித்து கொலை
ADDED : டிச 10, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த காலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அஜீத்குமார், 27. இவர், தன் நண்பர் சதீஷ், 29, உள்ளிட்டோருடன் சேர்ந்து, திருச்சி மாவட்டம், லால்குடி சாலையோரங்களில், 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வேலையை முடித்து விட்டு அஜீத்குமாரும், சதீசும் தங்களின் நண்பர்களுடன் மது அருந்தினர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சதீஷ், அங்கிருந்த இரும்பு கம்பியால் தாக்கியதில், படுகாயமடைந்த அஜீத்குமார் இறந்தார்.
லால்குடி போலீசார், சதீசை கைது செய்து விசாரிக்கின்றனர்.