/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மாநகராட்சியை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் மறியல்
/
மாநகராட்சியை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் மறியல்
மாநகராட்சியை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் மறியல்
மாநகராட்சியை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் மறியல்
ADDED : டிச 22, 2024 02:18 AM

திருச்சி:திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை, கே.கே.நகர் பிரதான சாலை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிந்து, தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை பணிகள் சரிவர மேற்கொள்ளாததால், குழாய் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
தற்போதைய மழையால், வீதிகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்காலிக சீரமைப்பு மேற்கொண்டாலும், அடிக்கடி இப்பிரச்னை ஏற்படுகிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், தி.மு.க.,வைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் விஜி தலைமையில், பொதுமக்கள், கே.கே.நகர் சாலையில் மறியல் செய்தனர். அங்கு வந்த மேயர் அன்பழகனை, கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேயர் பேச்சு நடத்தினார். பிரச்னையை தீர்க்க உரிய கால அவகாசத்தை அறிவிக்க வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் பணிகளை முடித்து, பிரச்னைக்கு தீர்வு காண்பதாக, உறுதியளித்தனர். போராட்டத்தை கைவிட்டு, மக்கள் கலைந்தனர்.