/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சிறுமியருக்கு தொல்லை தி.மு.க., பிரமுகர் 'எஸ்கேப்'
/
சிறுமியருக்கு தொல்லை தி.மு.க., பிரமுகர் 'எஸ்கேப்'
ADDED : நவ 08, 2024 02:05 AM
ஜீயபுரம்:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள சுனைபுகநல்லுாரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 56. மறைந்த, தி.மு.க., அமைச்சர் செல்வராஜின் ஆதரவாளரான இவர், பத்தாண்டுகளுக்கு முன் மண்ணச்சநல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலராக இருந்தார்.
இவர், அதே ஊரில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த, ஏழாவது மற்றும் ஆறாவது படிக்கும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சில நாட்களுக்கு முன், திருச்சி சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, சைல்டுலைன் அமைப்பினர் விசாரணை நடத்தி, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தில் தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை அறிந்த ஆனந்தன், தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
புகாரின் பின்னணியில் அரசியல் காரணம்:
நடந்து முடிந்த எம்.பி., தேர்தலில், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் நேருவின் மகன் அருண், மண்ணச்சநல்லுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சுனைபுகநல்லுாரில் பிரசாரம் செய்ய வந்தபோது, ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து அந்த ஊரில் பிரசாரம் செய்யாமல், அமைச்சர் நேரு தரப்பினர் சென்றனர். இந்த அரசியல் பிரச்னை காரணமாக, ஆனந்தன் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.