/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தி.மு.க., ஒன்றிய செயலர்கள் நடுரோட்டில் கட்டுப்புரண்டு சண்டை மணல் கடத்தல் விவகாரத்தில் பயங்கர மோதல்
/
தி.மு.க., ஒன்றிய செயலர்கள் நடுரோட்டில் கட்டுப்புரண்டு சண்டை மணல் கடத்தல் விவகாரத்தில் பயங்கர மோதல்
தி.மு.க., ஒன்றிய செயலர்கள் நடுரோட்டில் கட்டுப்புரண்டு சண்டை மணல் கடத்தல் விவகாரத்தில் பயங்கர மோதல்
தி.மு.க., ஒன்றிய செயலர்கள் நடுரோட்டில் கட்டுப்புரண்டு சண்டை மணல் கடத்தல் விவகாரத்தில் பயங்கர மோதல்
ADDED : டிச 27, 2025 04:26 AM
திருச்சி: மணல் கடத்தல் விவகாரத்தில், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதும், அதில், ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள டி.உடையாப்பட்டியில், மணப்பாறை கிழக்கு தி.மு.க., ஒன்றிய செயலர் ஆரோக்கியசாமி, தினமும் நுாற்றுக்கணக்கான லோடு செம்மண் கடத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான பிரச்னையை பேச, மணப்பாறை உள்ளிட்ட பல ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள் உடையாப்பட்டி சென்றுள்ளனர். இதையறிந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட வரும் ஆரோக்கியசாமி, தன் ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து, மணப்பாறை ஒன்றிய செயலர் ராமசாமியை தாக்கியுள்ளார்.
இதில், ராமசாமி காயமடைந்தார். ராமசாமி, தன் நண்பரின் காரில் மணப்பாறையில் உள்ள தி.மு.க., நகர செயலர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவரை விடாமல் தன் காரில் துரத்தி வந்த ஆரோக்கியசாமி, மணப்பாறை -- விராலிமலை ரோட்டில் காரை வழிமறித்து, ராமசாமியை, ஆரோக்கியசாமியும், அவரது ஆதரவாளர் அரவிந்தன் என்பவரும், நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கினர்.
அப்போது, ஒன்றிய செயலர் ராமசாமியும் பதிலுக்கு தாக்குதல் நடத்த, இருவரும் ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் கூட, ஆரோக்கியசாமி அங்கிருந்து காரில் தப்பியோடி விட்டார்.
அரவிந்தன், பேக்கரி கடையில் ஓடி ஒளிந்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணப்பாறை போலீசார், கடையில் ஒளிந்திருந்த அரவிந்தனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். ராமசாமி தாக்கப்பட்டதை அறிந்து அங்கு வந்த ஆதரவாளர்கள், மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, மறியலை கைவிட வைத்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த ராமசாமி, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் தி.மு.க., ஒன்றிய செயலர்கள் இருவர் கட்டிப்புரண்டு சண்டை போட்டது, அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

