/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கனிம வள ஆய்வு விமானம் தாழ்வாக பறந்ததால் பீதி
/
கனிம வள ஆய்வு விமானம் தாழ்வாக பறந்ததால் பீதி
ADDED : டிச 26, 2025 02:55 AM
திருச்சி: சிறிய விமானம் ஒன்று தாழ்வாக பறந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
திருச்சியில், நேற்று பகல் நேரத்தில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள காந்தி மார்க்கெட், பாலக்கரை, தென்னுார், கன்டோன்மென்ட், சத்திரம் போன்ற நகர் பகுதியில், பலத்த சத்தத்துடன் ஒற்றை இன்ஜின் விமானம் ஒன்று தாழ்வாக பறந்தது.
அந்த விமானம் தாழ்வாக பறந்ததால், பலரும் பீதியடைந்தனர்.
இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தொலை உணர்வு மற்றும் வான்வழி சொத்து மேலாண்மை பிரிவின் உத்தரவுப்படி, தனியார் நிறுவனம் மூலம், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பூமிக்குள் இருக்கும் கனிமங்களின் இருப்பிடத்தை கண்டறிய வான்வழி ஆய்வு மேற்கொள்ளப்படுவது தெரியவந்தது.
டிச., 8ம் தேதி முதல் துவங்கிய இந்த ஆய்வு, வரும் 1ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று ஆய்வு விமானம் தாழ்வாகப் பறந்தது, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

