/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சூதாட்டத்தில் பணம் பாக்கி புரோக்கர் வெட்டிக்கொலை
/
சூதாட்டத்தில் பணம் பாக்கி புரோக்கர் வெட்டிக்கொலை
ADDED : ஜன 22, 2025 01:56 AM
துவாக்குடி,:சூதாட்டத்தில் பணம் பாக்கி வைத்த புரோக்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி மலைப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் முகமது ஷெரீப், 35. ஆன்லைன் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்டத்தில் தோற்றதில், திருச்சியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு, 93,000 ரூபாய் கடன் தர வேண்டி இருந்தது. அந்த பணத்தை தராததால், ரவுடி சாத்தையன் மகன் கார்த்திக், 45, என்பவரிடம் செல்வம் கூறினார். இதையடுத்து முகமது ஷெரீப்பிடம், செல்வத்துக்கு பணத்தை தரும்படி கார்த்திக் கூறினார். இதனால் கோபமடைந்த ஷெரீப், தன் நண்பர்களுடன் கடந்த, 19ம் தேதி இரவு கார்த்திக் வீட்டுக்கு சென்று கேட்டார். அப்போது அங்கிருந்த கார்த்திக்கும், அவரது அண்ணன் காளிதாசும், அரிவாளால் முகமது ஷெரீப்பை வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதையடுத்து, துவாக்குடி போலீசார் கார்த்திக், 45, அவரது அண்ணன் காளிதாஸ், 51, ஆகியோரை கைது செய்தனர்.