/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்
/
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்
ADDED : ஜன 31, 2025 01:51 AM
திருச்சி:திருச்சி விமான நிலையத்தில், இரண்டு விமான பயணியரிடம் இருந்து, ஒரே நாளில், 1.16 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம், சிங்கப்பூரில் இருந்து வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், ஆண் பயணி ஒருவரின் லக்கேஜில், 15 தங்கச் செயின்கள், பிரேஸ்லெட், மோதிரம், தோடுகள் என, 282 கிராம் தங்க நகைகள் கடத்தி வந்திருந்ததை கண்டறிந்தனர். அவரிடம் இருந்து, 22 லட்சத்து 41,000 ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
அதே போல, மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த 'ஏர் ஏசியா' விமான பயணியரிடமும், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ஆண் பயணி ஒருவர், 1,141 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கம் கடத்தி வந்ததை கண்டறிந்தனர்.
அவரிடம் இருந்து, 94 லட்சத்து 53,000 ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில், 1.16 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.