/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மனைவி இறந்த விரக்தி கணவர் தற்கொலை
/
மனைவி இறந்த விரக்தி கணவர் தற்கொலை
ADDED : அக் 31, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:  மனைவி இறந்ததால் விரக்தி அடைந்த கணவர், அவர் இறந்த பத்து நாட்களில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி பெரியகடைவீதி நுார் நகைக்கடை ஸ்டோரில் வசித்தவர் நியாஸ், 53. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உடல்நலக்குறைவால் கடந்த, 10 நாட்களுக்கு முன் இறந்தார். இதனால் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்த நியாஸ், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

