/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
இரு ஆம்னி பஸ்கள் விபத்து: டிரைவர் பலி; 41 பேர் காயம்
/
இரு ஆம்னி பஸ்கள் விபத்து: டிரைவர் பலி; 41 பேர் காயம்
இரு ஆம்னி பஸ்கள் விபத்து: டிரைவர் பலி; 41 பேர் காயம்
இரு ஆம்னி பஸ்கள் விபத்து: டிரைவர் பலி; 41 பேர் காயம்
ADDED : அக் 27, 2025 11:55 PM

திருச்சி: வெவ்வேறு இடங்களில் இரு ஆம்னி பஸ்கள் கவிழ்ந்த விபத்தில், டிரைவர் ஒருவர் உயிரிழந்தார்; 41 பயணியர் காயமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து பெங்களுரூவுக்கு, ஆர்.கே.டி., என்ற தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சில் டிரைவர் உட்பட, 31 பேர் பயணம் செய்தனர்.
நேற்று அதிகாலை, 2:30 மணியளவில் பஸ், திருச்சி மாவட்டம், சிலையாத்தி என்ற இடத்தில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 21 பயணியர் காயமடைந்தனர்.
l காரைக்காலில் இருந்து கோவைக்கு, நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட கிரிஷ் என்ற ஆம்னி பஸ்சில், 34 பயணியர் இருந்தனர்.
நேற்று அதிகாலை, 2:45 மணியளவில், திருச்சி மாவட்டம், கடியாக்குறிச்சி அருகே பஸ் வந்தபோது, டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஐச்சர் வேன் மீது மோதியது. இதில், ஆம்னி பஸ் டிரைவர் துாத்துக்குடி, ஆறுமுகநேரியைச் சேர்ந்த கார்த்திக், 33, உயிரிழந்தார்; 20 பயணியர் காயமடைந்தனர்.

