ADDED : ஜன 20, 2024 01:09 AM
திருச்சி:தமிழகத்தில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது, 'தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளாகி, 5 பேர் பலி' என்று, எக்ஸ் தளத்தில், சவுக்கு சங்கர் ஆர்மி என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டது.
இது தவறான செய்து என்றும், இது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது அவதுாறு பரப்புவதாகவும் உள்ளது என்று, தி.மு.க., ஐ.டி., பிரிவு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., ஐ.டி., பிரிவு சார்பில், மாவட்ட செயலர் அருண் என்பவர், திருச்சி மாநகர போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், சவுக்கு சங்கர் ஆர்மி என்ற பக்கத்தில், முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து அவதுாறு பரப்பும் தகவல்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிகை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, சைபர் க்ரைம் போலீசார், சவுக்கு சங்கர் ஆர்மி பக்கத்தை நடத்துபவர்கள் மீது, 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.