sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

சிறுவன் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் விசாரணை

/

சிறுவன் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் விசாரணை

சிறுவன் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் விசாரணை

சிறுவன் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் விசாரணை


ADDED : பிப் 09, 2024 01:48 AM

Google News

ADDED : பிப் 09, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விடத்திலாம்பட்டியை சேர்ந்த இளங்கோ - ராசாத்தி தம்பதிக்கு, 9 வயது மகள், 7 வயது மகன் உள்ளனர். பட்டியலினத்தை சேர்ந்த இவர்கள் வீட்டருகே, மாற்று சமூகத்தை சேர்ந்த வடிவேல் - அழகுமணி ஆகியோர் வசிக்கின்றனர்.

சமூக வேறுபாடு காரணமாக இரு குடும்பத்தினர் இடையே ஏற்கனவே தகராறு உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு, 5ம் தேதி, வடிவேலுவின், 12 வயது மகன், இளங்கோவின், 7 வயது மகன் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

புகாரின்படி, மணப்பாறை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், வடிவேல், அழகுமணி, அவர்களின் மூன்று குழந்தைகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்த புகார் அடிப்படையில், நேற்று முன்தினம் தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய இயக்குனர் டாக்டர் ரவிவர்மன், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, திருச்சி துணை கலெக்டர் மிருணாளினி, மணப்பாறை டி.எஸ்.பி., ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us