/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
குடிநீர் குழாய் சீரமைப்பில் மண்ணில் சிக்கியவர் மீட்பு
/
குடிநீர் குழாய் சீரமைப்பில் மண்ணில் சிக்கியவர் மீட்பு
குடிநீர் குழாய் சீரமைப்பில் மண்ணில் சிக்கியவர் மீட்பு
குடிநீர் குழாய் சீரமைப்பில் மண்ணில் சிக்கியவர் மீட்பு
ADDED : டிச 05, 2024 11:32 PM

திருச்சி : திருச்சி, ஸ்ரீரங்கம், மேலுாரில் இருந்து திருச்சி மாநகரில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு குழாய் வழியாக குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் புதைக்கப்பட்ட குழாயில், கடந்த நான்கு நாட்களாக நீர் கசிவு ஏற்பட்டிருந்தது.
மாநகராட்சி அதிகாரிகள், நேற்று காலை, ஒப்பந்த ஊழியர்களுடன் சென்று, பொக்லைன் உதவியுடன் குழி தோண்டி, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி, மிளகு பாறை பகுதியை சேர்ந்த செல்வம், 42, என்ற ஒப்பந்த பணியாளர், 15 அடி ஆழ குழிக்குள் இறங்கி குழாய் உடைப்பை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில், குழிக்குள் இருந்த செல்வம் குழாய் இடுக்குகளில் சிக்கி, மண்ணில் புதைந்து உயிருக்கு போராடினார். மற்ற ஊழியர்கள், உடனடியாக குழிக்குள் இருந்து வெளியேறி விட்டனர்.
விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், மண்ணில் சிக்கியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவசர உதவிக்கு டாக்டர்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. மண்ணில் புதைந்த செல்வத்துக்கு, குழாய் வாயிலாக ஆக்சிஜன் செலுத்தி, மீட்கும் பணி நடந்தது.
உடனடியாக, இரண்டு பொக்லைன்களை பயன்படுத்தி, குழிக்குள் சரிந்த மண்ணை, வேகமாக அகற்றினர். கழுத்துக்கு மேல் வரை மண் மூடி, சிக்கி கிடந்தவரை, ஒரு மணி நேரம் முயற்சி செய்து உயிருடன் மீட்டனர்.
பின், அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.