/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மதுரை, கோவைக்கு முதலில் மெட்ரோ ரயில் சேவை: நேரு
/
மதுரை, கோவைக்கு முதலில் மெட்ரோ ரயில் சேவை: நேரு
ADDED : மே 18, 2025 04:30 AM
திருச்சி: திருச்சியில் கோரையாறு மற்றும் உய்யக்கொண்டான் ஆற்றங்கரை பகுதியில், 68 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை, அமைச்சர் நேரு பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மதுரை, கோவை நகரங்களில் முதலில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கும். திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆய்வறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி, பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, வண்ணத்துப்பூச்சி வடிவில் மேம்பாலம் அமைக்க நிலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சப்பூரில் 3.5 கி.மீ., தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் அனைத்து பணிகளையும் முடித்து விட்டோம். இனிமேல் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணியை துவங்க வேண்டும்.
தமிழகம் முழுதும் மாநகராட்சியுடன் உள்ளாட்சிகளை இணைப்பதற்கான கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. மாநகராட்சி வார்டுகளில் ஓட்டு எண்ணிக்கையை ஒரே சீரான வகையில் பிரித்து, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி உள்ளாட்சிகள் இணைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.