/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நடுவானில் இயந்திரக் கோளாறு: திருச்சியில் விமானம் அவசர தரையிறக்கம்
/
நடுவானில் இயந்திரக் கோளாறு: திருச்சியில் விமானம் அவசர தரையிறக்கம்
நடுவானில் இயந்திரக் கோளாறு: திருச்சியில் விமானம் அவசர தரையிறக்கம்
நடுவானில் இயந்திரக் கோளாறு: திருச்சியில் விமானம் அவசர தரையிறக்கம்
ADDED : மே 18, 2024 02:47 PM

திருச்சி: திருவனந்தபுரத்தில் இருந்து 167 பயணிகளுடன் கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் திருச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 167 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்பியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனையறிந்த விமானி அவசரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
விமானத்தில் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.