/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
டூ-வீலரில் சென்ற தாய், மகள் கார் மோதி பலி
/
டூ-வீலரில் சென்ற தாய், மகள் கார் மோதி பலி
ADDED : ஏப் 13, 2025 03:21 AM
திருச்சி: திருச்சியில், டூ-வீலர் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில், தாய், மகள் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கோவாண்டங்குறிச்சியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் ஸ்டாலின்.
இவர் தன் மனைவி சத்யா, 39, மகள் பெரிய நாயகி, 11, மற்றும் மகன் ரெமிஜியஸ், 6, ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு டூ-வீலரில் ஸ்ரீரங்கம் சென்று கொண்டிருந்தார். நால்வரும் ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில், பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார், அவர்களின் டூ-வீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. சாலையில் துாக்கி வீசப்பட்ட சத்யா, பெரியநாயகி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
காயமடைந்த மற்ற இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருச்சி நெ. 1 டோல்கேட் போலீசார், இருவரை பலி வாங்கி, தப்பிய காரை தேடுகின்றனர்.