/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பஸ் ஸ்டாண்ட் கூரை இடிந்து ஒருவர் படுகாயம்
/
பஸ் ஸ்டாண்ட் கூரை இடிந்து ஒருவர் படுகாயம்
ADDED : அக் 22, 2024 11:15 PM

திருச்சி,:திருச்சி மாவட்டம் துறையூரில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 42 கடைகளுடன் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுவதை, நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக சரிசெய்கிறது.
பஸ் ஸ்டாண்டில் உள்ள சலுான் கடை முன், வெளிப்புற கூரை, நேற்று காலை திடீரென பெயர்ந்து விழுந்ததில், கடை வாசலில் அமர்ந்திருந்த, சலுானில் வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்டை முழுமையாக மராமத்து செய்து, பயன்பாட்டுக்கு விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

