/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
/
பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
ADDED : ஜூன் 12, 2025 02:20 AM
திருச்சி:திருச்சி அருகே உள்ள அரசு மாதிரி பள்ளி விடுதியில், பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில், நவீன வசதிகளுடன் அரசு மாதிரி பள்ளி கட்டப்பட்டு, மே, 8ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உண்டு, உறைவிட பள்ளியான இங்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு, திருவள்ளூர் மாவட்டம், டி.செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த தனபாலன் மகள் ப்ரீத்திகா, 16, என்ற, பிளஸ் 2 கம்யூட்டர் சயின்ஸ் மாணவி நேற்று காலை, விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம், துவாக்குடி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார், விசாரிக்கின்றனர்.
மேலும், திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், எஸ்.பி., செல்வ நாகரத்தினம் ஆகியோர் பள்ளிக்கு வந்து, மாணவியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.