ADDED : நவ 13, 2024 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி ; திருச்சி வயலுார் ரோடு, குமரன் நகர், ராமலிங்கநகர் பகுதியில், சில நாட்களுக்கு முன், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன.
அப்பகுதியினர் பார்த்த போது, கோழிக்கறியில் விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும், அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில், ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள், நாய்கள் நின்ற இடத்தில் கோழிக்கறிகளை வீசிச் சென்றது தெரிந்தது.
இந்நிலையில், நேற்று விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.