/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
வாய்க்காலில் பாய்ந்த கார் கர்ப்பிணி மூழ்கி உயிரிழப்பு
/
வாய்க்காலில் பாய்ந்த கார் கர்ப்பிணி மூழ்கி உயிரிழப்பு
வாய்க்காலில் பாய்ந்த கார் கர்ப்பிணி மூழ்கி உயிரிழப்பு
வாய்க்காலில் பாய்ந்த கார் கர்ப்பிணி மூழ்கி உயிரிழப்பு
ADDED : ஆக 08, 2025 01:15 AM

வாத்தலை:திருச்சியில் கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் பாய்ந்து கர்ப்பிணி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், எழில் நகரைச் சேர்ந்தவர் முருகன், 38; பி.எச்.இ.எல்., நிறுவன ஊழியர். இவரது மனைவி திலகவதி, 32. தம்பதிக்கு அஸ்வினி, 9, திருகுமரன், 4, என இரு குழந்தைகள் உள்ளனர்.
கர்ப்பிணியாக இருந்த மனைவி மற்றும் குழந்தைகளுடன் முருகன், சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்து கொண்டிருந்தார்.
நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சி மாவட்டம், துடையூர் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை ஒட்டி யிருந்த அய்யன் வாய்க் காலில் பாய்ந்து மூழ்கியது. முருகன் கார் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை காப்பாற்றினார்.
திலகவதி கூச்சலிட்டவாறு நீரில் மூழ்கினார். முருகன், அவரையும் காப்பாற்றி மேலே கொண்டு வந்த போது, மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வாத்தலை போலீசார் விசாரிக் கின்றனர்.