ADDED : ஏப் 04, 2025 02:32 AM
திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே புரத்தாக்குடியில் துாய சவேரியார் பள்ளி மாணவர் விடுதி வார்டனாக, கும்பகோணத்தைச் சேர்ந்த குழந்தைநாதன், 48, என்ற பாதிரியார் உள்ளார்.
இவரது நண்பர் சுந்தர்ராஜன், 40, திருச்சி கல்லுாரியில் முதுகலை படித்துக் கொண்டு, பாதிரியார் ஆவதற்கு இறையியல் கல்லுாரியிலும் படித்து வருகிறார்.
சுந்தர்ராஜன், வார விடுமுறை நாட்களில் குழந்தைநாதனை பார்க்க, பள்ளி விடுதிக்கு வந்து தங்குவார். அப்போது, அங்குள்ள மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவர்கள் குழந்தைநாதனிடம் தெரிவித்தபோது, அவர் கண்டுகொள்ளவில்லை. திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் புகார் அளிக்கப்பட்டது.
அதிகாரிகள் விடுதி மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஏழு மாணவர்களுக்கு சுந்தர்ராஜன் பாலியல் தொல்லை அளித்ததும், குழந்தைநாதன் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. லால்குடி மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து, குழந்தைநாதன், சுந்தர்ராஜன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

