/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நாயை அடித்து துன்புறுத்திய சுகாதார பணியாளர் நீக்கம்
/
நாயை அடித்து துன்புறுத்திய சுகாதார பணியாளர் நீக்கம்
நாயை அடித்து துன்புறுத்திய சுகாதார பணியாளர் நீக்கம்
நாயை அடித்து துன்புறுத்திய சுகாதார பணியாளர் நீக்கம்
ADDED : பிப் 17, 2025 12:58 AM
திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், நாயை இரும்பு கம்பியால் அடித்த சுகாதார பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தெரு நாய் ஒன்று நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு மாற்று பணியில் ஈடுபட்டிருந்த, மண்ணச்சநல்லுார் பேரூராட்சி பொது சுகாதார பணியாளரும், காமராஜர் ஆண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினருமான சேகர், அந்த நாயை இரும்பு கம்பியால் அடித்தார்.
இதில், தாடை கிழிந்து உயிருக்கு போராடிய நாயை, ஓரமாக துாக்கி வீசி சென்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மண்ணச்சநல்லுார் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், சுய உதவிக்குழு உறுப்பினரில் இருந்து சேகரை நீக்கி உள்ளார். அவர் மீது போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த நாய்க்கு, திருச்சி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

