/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கிணற்றில் விழுந்த காட்டெருமை மயக்க ஊசி செலுத்தி மீட்பு
/
கிணற்றில் விழுந்த காட்டெருமை மயக்க ஊசி செலுத்தி மீட்பு
கிணற்றில் விழுந்த காட்டெருமை மயக்க ஊசி செலுத்தி மீட்பு
கிணற்றில் விழுந்த காட்டெருமை மயக்க ஊசி செலுத்தி மீட்பு
ADDED : ஜன 30, 2024 12:57 AM

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நடுப்பட்டி, செம்மலை அடிவாரத்தில் உள்ள பிச்சை என்பவரின், 50 அடி விவசாய கிணற்றில், நேற்று காலை காட்டெருமை ஒன்று விழுந்து, 20 அடி தண்ணீரில் தத்தளித்தது.
இதைப்பார்த்த அவர், உடனடியாக மணப்பாறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் காட்டெருமையை மீட்க முயன்றனர். அது ஆக்ரோஷமாக இருந்ததால், மீட்க முடியவில்லை.
ஸ்ரீவில்லிப்புத்துார் - மேகமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, நேற்று மதியம் காட்டெருமைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர்.
பின், கயிறு கட்டி, கிரேன் வாயிலாக காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மயக்கம் தெளிந்த பின், காட்டெருமை மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.